இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போட்டியிலிருந்து விலக இதுவே காரணம்!

 

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போட்டியிலிருந்து விலக இதுவே காரணம்!

கொரோனா முடக்கத்தால் பல விளையாட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் தொடங்கி நடைபெற்றிருக்க வேண்டும். அது கொரோனா நோய்ப் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பரில் ஐக்கிய அமீரகத்தில் நடக்க விருக்கிறது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்றுவருகிறது.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போட்டியிலிருந்து விலக இதுவே காரணம்!

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. ஆயினும் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்ட்ர் பென் ஸ்டோக்ஸ், முதல் இன்னிங்கிஸில் ரன் ஏதும் எடுக்காமலும், இரண்டாம் இன்னிங்கிஸில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவைத் தந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பென் ஸ்டோக்ஸ் திடீரென்று போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதற்கான காரணம் தொடக்கத்தில் தெரியாமல் இருந்தது. தற்போது சொல்லப்படுவது என்னவெனில், அவரது தந்தை நியூசிலாந்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாராம். அவரைக் காணவே பென் ஸ்டோக்ஸ் போட்டியிலிருந்து விலகியிருக்கிறாராம்.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போட்டியிலிருந்து விலக இதுவே காரணம்!

ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இது பென் ஸ்டோக்ஸின் குடும்ப விவகாரம். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கேட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவுதான். பென் ஸ்டோக்ஸ்க்குப் பதில் சாம் கரணா இறக்கப்படுவார் எனத் தெரிகிறது.