கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகித்ததினருக்கு நோய் வர காரணம் இதுவே!

 

கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகித்ததினருக்கு நோய் வர காரணம் இதுவே!

இருபது ஆண்டுகளுக்கு முன், யாருக்கேனும் கேன்சர் நோயாளிகள் அங்கொன்றும் இங்கொன்றும் அரிதாக இருந்தார்கள். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது. நம் உறவினர்களில் கூட ஒருசிலருக்கு வந்திருக்கக் கூடும்.

உணவுப் பழக்கம் மாறியதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளாததும் தேவையில்லாத பழக்கங்களைத் தொடர்வதுமே கேன்சர் வருவதற்கான மிகவும் முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகித்ததினருக்கு நோய் வர காரணம் இதுவே!

கேன்சர் என்பது சுமார் 50 வயதை ஒட்டியவர்களுக்கு அதிகம் வந்துகொண்டிருந்த நிலையும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் சின்னக் குழந்தைகளுக்குக் கூட கேன்சர் வரும் கொடுமையப் பார்க்கிறோம்.

எனவே வரும்முன் காப்பது மட்டுமே சரியாக இருக்க முடியும். ஏனெனில் புற்றுநோய் குறித்து வரும் புள்ளி விபரங்கள் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்று நோய் தகவல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் 12 சதவிகிதம் புற்றுநோயாளிகள் அதிகரிக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளது.

கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகித்ததினருக்கு நோய் வர காரணம் இதுவே!

2020 ஆண்டில் இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13,92,179 என்று தேசிய புற்றுநோய் திட்ட அறிக்கை கூறுகிறது. இது இன்னும் ஐந்தாண்டுகளில் 15 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடக்கும் என்று அபாய எச்சரிக்கையையும் அளிக்கிறது.

கேன்சர் நோயாளிகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் இருக்கிறார்கள். அதிலும் மார்பக புற்றுநோய் இளவயது பெண்களுக்குக்கூட வருவது ஆபத்தாக இருக்கிறது. அதனால், முறையான மார்பகப் பரிசோதனைகளை சீரான இடைவெளியில் எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகிதத்தினருக்கு புகையிலை பழக்கத்தினால்தான் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. அரசும் புகையிலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்லி பல கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்கிறது. ஆயினும் புகையிலை பழக்கத்தால் கேன்சர் நோயாளியாவது அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகித்ததினருக்கு நோய் வர காரணம் இதுவே!

கேன்சர் என்பது ஒருகாலத்தில் குணப்படுத்தவே முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது பலவகை சிகிச்சைகள் மூலம் முற்றிலும் குணப்படுத்திவிட முடியும். ஆனால், அதற்கான செலவும் சிகிச்சையின்போது அடையும் வலியும் வேதனையும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.

சிலர் குறைந்த எண்ணிக்கையில் சிகரெட் புகைத்தால் கேன்சர் வராது என்று நம்புகிறார்கள். மற்றவர்களுக்கும் இதைச் சொல்கிறார்கள். உண்மையில், இது தவறான கருத்து. சிகரெட் புகைக்காமல் இருப்பதே நல்லது.

கேன்சர் பற்றி நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால், அந்தத் தகவல்களைக் கொண்டு, தனக்கு சின்னதாக ஏதேனும் ஒரு கட்டி வந்துவிட்டால் உடனே கேன்சர் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகித்ததினருக்கு நோய் வர காரணம் இதுவே!

பலரும் தாமாகவே சில முடிவுகளை எடுப்பதால் ஆபத்தை நோக்கிச் செல்லும்படி ஆகிவிடுகிறார்கள். அந்தக் கட்டி கேன்சரா இல்லையா என்பதை மருத்துவர்தான் சொல்ல வேண்டும். தேவையற்ற பயமும் மனநோயை வரவழைத்து விடும். பல வியாதிகளின் தொடக்கமே மன பதற்றமும் தவறான வழிகாட்டலும்தான்.

கேன்சர் தாக்காதிருக்க, நல்ல உணவுப் பழக்கம் அவசியம். அத்தோடு நல்ல வழிகாட்டலோடு உடற்பயிற்சியை தினமும் செய்துவாருங்கள். அதன் முதல் பயிற்சியாக நாளை முதல் நடைப் பயிற்சியைத் தொடங்குங்கள்.

கேன்சர் நோயாளிகளில் 27 சதவிகித்ததினருக்கு நோய் வர காரணம் இதுவே!

முக்கியமாக, மது, புகையிலை பழக்கம் இருந்தால் அதை மருத்துவர் உதவியுடன் நிறுத்துங்கள். எந்தவொரு பழக்கத்தை சட்டென்று நிறுத்துவதும் ஆபத்து. எனவே மருத்துவரை அணுகுவதைத் தவிர்க்க வேண்டாம்.