Home உலகம் பாலியல் குற்றமா… இனி இதுதான் தண்டனை! அதிர வைக்கும் பாகிஸ்தான்

பாலியல் குற்றமா… இனி இதுதான் தண்டனை! அதிர வைக்கும் பாகிஸ்தான்

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பாலியல் வழக்குகள் மட்டுமே 33 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதியப்படுகின்றனவாம். கணக்கிட்டுப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு 90 வழக்குகளுக்கும் அதிகம். அப்படியெனில் ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 3 அல்லது 4 வழக்குகள்.

நேற்றுகூட சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல் துறை சார்ந்த ஒருவர் கைதான செய்தியைப் படித்திருப்போம். வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது?  

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பல நாடுகளில் கடுமையான தண்டனை விதித்து , குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க பார்க்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் பாலியல் குற்றங்களுக்கு வெவ்வேறு விதமான தண்டனைகள் அளிக்கப்படுவது உண்டு. சமீபத்தில் வெளியான ஒரு செய்தி கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானில் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் ஆண்மை நீக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் தயாராகி வருகிறதாம். இதை அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளித்தும் விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Imran Khan

வழக்கமாக, அரபு நாடுகளில் தண்டனை மிக அதிகமாக இருக்கும். பழங்கால ராஜாக்களின் தண்டனைகள் போல கை, கால் துண்டிப்பு, தலையை வெட்டி மரண தண்டனை அளிப்பது போன்றவை இருக்கும். அதில் முரண்படும் பலௌமூட, இப்போது பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு இப்படித் தண்டனை கொடுக்கவிருக்கும் செய்தியை வரவேற்றுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி… எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆசியாவிலிருந்து வர வேண்டும்… மோடி

நம் நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடி மதிப்பில் சிறப்பு நிதியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்...

சாலையோர டீ கடைக்குள் புகுந்த மினி ஆட்டோ… பெண் உள்பட 5 பேர் படுகாயம்…

திருப்பத்தூர் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மினி ஆட்டோ ஒன்று, சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.த

“பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது”- அமைச்சர் பென்ஜமின்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு, திட்டதை தொடங்கிவைத்தார். தொடர்ந்து...

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு… திமுகவை சேர்ந்த 2 பேர் கைது…

கோவை சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பரப்பியதாக திமுகவை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
Do NOT follow this link or you will be banned from the site!