இப்படி ஒரு ஃபீல்டிங்கை முதன்முறையாகப் பார்க்கிறேன் – டெண்டுல்கர் புகழும் வீரர் இவர்தான்

இப்படி ஒரு ஃபீல்டிங்கை முதன்முறையாகப் பார்க்கிறேன் – டெண்டுல்கர் புகழும் வீரர் இவர்தான்

நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

டாஸ் வின் செய்த ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங் அகர்வால் இருவரும் அதிரடியாக ஆடி, 224 எனும் பெரிய ஸ்கோரை ராஜஸ்தானுக்கு இலக்காக வைத்தார்கள்.

இப்படி ஒரு ஃபீல்டிங்கை முதன்முறையாகப் பார்க்கிறேன் – டெண்டுல்கர் புகழும் வீரர் இவர்தான்

ராஜஸ்தான் அணியில் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராகுல் திவேட்டியா ஆகியோர் அதிரடியாக ஆடி வரலாற்று வெற்றியைத் தேடித் தந்தனர்.

இப்படி ஒரு ஃபீல்டிங்கை முதன்முறையாகப் பார்க்கிறேன் – டெண்டுல்கர் புகழும் வீரர் இவர்தான்

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனை சிக்ஸருக்கு அடித்த பந்தை எல்லைக் கோட்டில் ஃபீல்ட்டிங்கில் நின்ற நிக்கோலஸ் பூரண் அபாரமாகத் தடுத்தார். அதாவது பவுண்டரி எல்லைக் கோட்டைத் தாண்டி தாவிச் சென்ரு பந்தைப் பிடித்து, கால்கள் கீழே படாமல் பந்தை எல்லைக்குள் விட்டெறிந்தார். இதனால், சிக்ஸர் செல்வது தடுக்கப்பட்டது. பூரணின் இந்த ஃபீல்டிங்கை அப்போது கமெண்ட்ரி செய்தவர்கள் பாராட்டித் தள்ளினார்கள். பஞ்சாப் அணியின் கோச் ஜாண்டி ரோட்ஸ் எழுந்துநின்று கைத்தட்டிப் பாராட்டினார்.

இப்படி ஒரு ஃபீல்டிங்கை முதன்முறையாகப் பார்க்கிறேன் – டெண்டுல்கர் புகழும் வீரர் இவர்தான்

நேற்று இரவு முதலே பூரணின் இந்த ஃபீல்டிங் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. சேவாக், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பூரனின் ஃபீல்டிங் போட்டோவைப் பகிர்ந்துகொண்டு, ரன்களைச் சேவ் பண்ணும் ஒரு ஃபீல்டிங்கை என் வாழ்வில் முதல்முறையாகப் பார்க்கிறேன் என்று பாராட்டியுள்ளார்.

சச்சின் மட்டுமல்ல, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பூரணின் ஃபீல்டிங்கைப் பாராட்டி ஸ்கிரின் ஷாட்களைப் பகிர்ந்து வருகின்றனர். பஞ்சாப் டீம் வெற்றி அடைந்திருந்தால் பூரணின் இந்த ஃபீல்டிங் இன்னும் பெருமையுடன் பேசப்பட்டிருக்கும். ராகுல் திவேட்டியா அடித்த ஐந்து சிக்ஸர்கள் பஞ்சாப் டீமிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டன.

  • இப்படி ஒரு ஃபீல்டிங்கை முதன்முறையாகப் பார்க்கிறேன் – டெண்டுல்கர் புகழும் வீரர் இவர்தான்