Home விளையாட்டு கிரிக்கெட் ’ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்’ யாக்கர் நடராஜனை வரவேற்பது இவர்தான்!

’ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்’ யாக்கர் நடராஜனை வரவேற்பது இவர்தான்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று. இது முடிந்ததும் இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன இரு அணிகளும்.

இதற்கான அணிகளும் வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். டி20 அணியில் இருந்த தமிழக வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் தங்கராசு சேர்க்கப்பட்டிருக்கிறார்.

காயம் காரணமாக, ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடாத ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறார். முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் சொந்த வேலைகாரணமாக கேப்டன் கோலி இந்தியா திரும்புகிறார். அதனால், மீதமுள்ள போட்டிகளை ரோஹித் ஷர்மா கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிகிறது.

இதில் ஆடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடராஜனை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி’ என ட்விட் செய்து வரவேற்றிருக்கிறார். இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடியவர்கள். தனது யாக்கர் பந்து வீச்சால் மிரட்டியதில் வார்னரின் பாராட்டையும் பெற்றவர். இதன்மூலம் புதிய நட்பு உருவாகிவிட்டது.

மாவட்ட செய்திகள்

Most Popular

புதுச்சேரியை பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றும்.. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்..

புதுச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணி்ப்புகள் தெரிவிக்கிறது. புதுச்சேரி...

ஸ்டாலினை தோற்கடிப்பது எப்படி? கராத்தே தியாகராஜன் சொல்லும் ஐடியா!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மயிலாப்பூர், காரைக்குடி, சேப்பாக்கம் ,வேளச்சேரி ,காஞ்சிபுரம், திருத்தணி, பழனி, சிதம்பரம்,...

சலசலப்பை ஏற்படுத்திய மணிசங்கர் அய்யர்; சரிகட்டும் ஜோதிமணி

கே.எஸ்.அழகிரியின் கண்ணீருக்கு கிடைத்த பரிசுதான் 25 சீட்டு. இத்தனை பாடுபட்டு கண்ணீர் சிந்தி அவர் 25 சீட்டு வாங்கியிருக்கும்போது, அதிகமான இடங்கள் வாங்கினாலும் ஜெயிக்க முடியாது என்று காங்கிரசாரே சொல்லி...

திமுகவின் முக்கிய அறிவிப்பு : ஆவலுடன் கூட்டணி கட்சிகள்!

திமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TopTamilNews