ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் செய்த புதிய சாதனை இதுதான்!

 

ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் செய்த புதிய சாதனை இதுதான்!

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி என்பதாக இருந்தது. பலம் வாய்ந்த டெல்லி அணியை பஞ்சாப் அணியால் வெல்ல முடியாது என்பதே பலரின் கணிப்பாக இருந்தது.

ஆனால், பூரண், மேக்ஸ்வெல் இருவரின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி வெற்றியை ருசித்தது.

ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் செய்த புதிய சாதனை இதுதான்!

இந்தப் போட்டியில் டெல்லி அணி வீரர் ஷிகர் தவான் புதிய சாதனையைச் செய்துள்ளார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடி டெல்லி அணியில் ஓப்பனிங்கில் இறங்கிய ஷிகர் தவான் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ஆடினார். அவர் சந்தித்த பந்துகள் 61. அதாவது 10.1 ஓவரை அவரே ஆடியிருக்கிறார். 3 சிக்ஸர்கள், 12 பவுண்ட்ரிகளோடும் 106 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களைக் கடந்தார்.

ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் செய்த புதிய சாதனை இதுதான்!

இதற்கு முந்தைய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆடுகையில் இதேபோல ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல், 58 பந்துகளைச் சந்தித்து 1 சிக்ஸர், 14 பவுண்ட்ரிகளோடு 101 ரன்கள் விளாசினார்.

ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடுத்தது இல்லை. அந்தப் புதிய சாதனையை ஷிகர் தவான் நேற்றைய போட்டியில் பதிய வைத்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் செய்த புதிய சாதனை இதுதான்!

ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடுத்தவர்களின் பட்டியலில் 6 சதம் அடித்து கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருக்கிறார். 5 சதங்களோடு விராட் கோலி இரண்டாம் இடத்திலும், டேவிட் வார்னர், ஷேன் வாட்ஸன் இருவரும் தலா 4 சதங்கள் அடித்து முறையே 3, 4-ம் இடங்களில் உள்ளனர். டி வில்லியர்ஸ் 3 சதங்கள் விளாசிஐந்தாம் இடத்தில் உள்ளார்.

இந்த சீசனில் ஷிகர் தவான் விளாசிய இரு சதங்களின் மூலம் ஆறாம் இடத்தில் உள்ளார்.