கொரோனா அச்சமா? உடனே பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துங்கள்!

 

கொரோனா அச்சமா? உடனே பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துங்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் காட்டி வருகிறது இதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூச்சு விட சிரமம் இருந்தாலே சிலர் கொரோனாவாக இருக்குமோ என்று பயப்படுகிறார்கள். கொரோனா காரணமாக தனிமையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறதா? இல்லையா என்ற பயப்படுகிறார்கள். இந்த சூழலில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டாலோ, அல்லது வீட்டு தனிமையில் இருந்தாலோ உங்கள் ஆக்சிஜன் அளவை அறிந்துகொள்ள பல்ஸ் ஆக்சி மீட்டர் பயன்படுத்தி கொள்ளலாம். கொரோனா காரணமாக வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தவாறே, பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு கொண்டு உங்கள் ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ளலாம். 95% முதல் 100% வரை இருப்பது இயல்பு. 94% கீழே இருந்தால் மீண்டும் விரலை மாற்றி பயன்படுத்தி பாருங்கள். அப்போதும் அதே அளவு இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

கொரோனா அச்சமா? உடனே பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துங்கள்!

பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை:-

10 நிமிடம் நிதானமாக அமர்ந்தபின் உங்கள் ஆக்சிஜன் அளவை சரிபார்க்கவும்

கருவியைப் பயன்படுத்துவதற்கு முன் விரல்களை கிருமி நாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும்

ஆள்காட்டிவிரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்தவும்

கொரோனா அச்சமா? உடனே பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துங்கள்!

கருவியில் தெரியும் ஆக்சிஜன் அளவும், நாடித் துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்கவும்

சில விநாடிகளுக்குப் பிறகு ஆக்சிஜன் அளவையும் நாடித்துடிப்பையும் குறித்துக் கொள்ளவும்

விரல்களில் மருதாணி, நகப்பூச்சு, ஈரம் மற்றும் குளுமை ஆக்சிஜன் அளவை தவறாக காட்டக்கூடும்

ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் மற்ற கையிலுள்ள விரல்களில் பார்க்கவும்

தொடர்ந்து 94 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும்