கோலி, ரோஹித் ஷர்மா இல்லாத லெவன் அணியைச் செலக்ட் பண்ணிய முன்னாள் வீரர் இவர்தான்!

 

கோலி, ரோஹித் ஷர்மா இல்லாத லெவன் அணியைச் செலக்ட் பண்ணிய முன்னாள் வீரர் இவர்தான்!

ஐபிஎல் திருவிழாவில் 60 வது மற்றும் இறுதிப் போட்டி இன்று நடக்க விருக்கிறது. மோதும் அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்.

இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த ஐபிஎல் லெவன் அணியைப் பட்டியலிட்டு வருகிறார்கள். அந்தப் பட்டியலில் சீனியர் வீரர்கள் பலரையும் சேர்க்க மறுக்கிறார்கள்.

கோலி, ரோஹித் ஷர்மா இல்லாத லெவன் அணியைச் செலக்ட் பண்ணிய முன்னாள் வீரர் இவர்தான்!

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி தனது ஐபிஎல் கனவு டீம் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில் சீனியர், இளம் வீரர்கள் என கலந்தே உள்ளது.

அந்த அணியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் இல்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

கோலி, ரோஹித் ஷர்மா இல்லாத லெவன் அணியைச் செலக்ட் பண்ணிய முன்னாள் வீரர் இவர்தான்!

டாம் மூடியின் ட்ரீம் அணியின் ஓப்பனர்கள் ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல். 3-ம் வீரராக அவர் தேர்ந்தெடுத்திருப்பது சூர்யகுமார் யாதவ். நான்காம் வீரர் இந்த சீசனில் செம ஃபார்மில் இருந்த டி வில்லியர்ஸ். இஷான் கிஸன், ராகுல் திவட்டியா, என பேட்டிங்கிலும், ரஷித் கான், ஆர்ச்சர், ரபாடா, சஹல், பும்ரா என பவுலிங்கிலும் தம் தேர்வைக் காட்டியிருக்கிறார்.

நல்ல டீம்தான் என்றாலும் நட்ராஜ், படிக்கல் போன்ற இளம் வீரர்களை அவரது அணியில் இடம்பெறச் செய்து பலரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்பது பலரின் கருத்து.தோனிக்கு அடுத்து பெஸ்ட் பினிஷர் என அவரே புகழ்ந்த ஹிர்த்திக் பாண்டியாவும் டீமில் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி, ரோஹித் ஷர்மா இல்லாத லெவன் அணியைச் செலக்ட் பண்ணிய முன்னாள் வீரர் இவர்தான்!

இன்னொரு பக்கம், தோனியின் பெயர் இடம்பெற வில்லை என்று எவரும் கவலைக்கூட படவில்லை என அவரின் ரசிகர்கள் வருத்தப்பட்டிருக்கக்கூடும்.