Home விளையாட்டு 75 கோடி ரூபாய்க்கு கார் வாங்கப்போகும் விளையாட்டு வீரர் இவர்தான்

75 கோடி ரூபாய்க்கு கார் வாங்கப்போகும் விளையாட்டு வீரர் இவர்தான்

புகாட்டி செண்டோடிஸி இது ஒருவகையான ஸ்போர்ட்ஸ் கார். இந்த வகை கார்கள் அதிகளவில் தயாரிக்கப்படுவது இல்லை விவிவிஐபிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இவை உருவாக்கப்படுகின்றன. இந்த வகை அதிகபட்சம் 10 கார்களே தயாரிக்கப்படும்.

 

மணிக்கு 380 கிலோமீட்டரில் செல்லலாம் இல்லை இல்லை பறக்கலாம். அந்தளவுக்கு மிக வேகமாகச் செல்லக்கூடியது புகாட்டி செண்டோடிஸி. 1600 குதிரைத் திறன் சக்தி கொண்ட இன்ஜின் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். பார்த்தவுடனே கவரும் விதத்தில் இதன் லுக் இருக்கும்.

சரி… சரி.. இதன் விலை எவ்வளவு என்று கேட்கிறீர்களா… அதிகமில்லை. 8.5 மில்லிய்ன் யூரோ ( இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் வரும்)

இவ்வளாவு விலை மதிப்பு மிக்க காரை புக் செய்திருக்கிறார் விளையாட்டு வீரர் ஒருவர். அவர்தான் கால்பந்து விலையாட்டின் நட்சத்திர ஆட்டக்காரர்… உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த ரொனால்டோ.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சின்ன வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டின் காதலன். 2014-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் கோப்பை தொடரில் ரொனால்டோ அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 17. படிக்கும்போதே வியப்பாக இருக்கிறது அல்லவா… இப்படி தன் நாட்டு அணி வெல்ல இறுதிவரை போராடும் ஆற்றலும் உத்வேகமும் கொண்டவர் ரொனால்டோ. அதுதான் 35 வயதாகியும் உற்சாகமாக முதல்நிலை கால்பந்து வீரராக அவரை வைத்திருக்கிறது.

Ronaldo

தற்போது இத்தாலியின் நடைபெற்றுவரும் ஒரு கால்பந்து தொடரில் ரொனால்டோ இடம்பெற்ற யுவெண்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவே இவ்வளவு விலை மதிப்புள்ள காரை புக் செய்திருக்கிறார் ரொனால்டோ.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

சமயபுரம் கோவிலில் துர்கா ஸ்டாலின்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா, இன்று தரிசனம் செய்தார். விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுகவின் சிறப்பு...

பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் எவை? அதிமுக- பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்துவிட அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. 3ஆவது முறையாக ஆட்சியை...

தமிழரா? திராவிடரா? ஸ்டாலினை ஒரு கை பார்ப்பேன் என கூறிவிட்டு பின்வாங்கிய சீமான்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில்...

இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில், பெயிண்டர் பலி!

கரூர் கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார் கரூர் மாவட்டம், தென்னிலை அருகேயுள்ள...
TopTamilNews