இங்கிலாந்தில் லாக்டெளன் முடிவுக்கு வரும் தேதி இதுதான்!

 

இங்கிலாந்தில் லாக்டெளன் முடிவுக்கு வரும் தேதி இதுதான்!

கொரோனாவினால் உலக நாடுகள் அனைத்துமே அச்சத்தில் உள்ளன. எப்படியாவது கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்த போராடி வருகின்றன வல்லரசு நாடுகளுமே.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 89 லட்சத்து 85 ஆயிரத்து 500 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 07 லட்சத்து 66 ஆயிரத்து 904 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 93 ஆயிரத்து 671 பேர்.

இங்கிலாந்தில் லாக்டெளன் முடிவுக்கு வரும் தேதி இதுதான்!

இங்கிலாந்து நாட்டில் கொரொனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த நாட்டின் மொத்த பாதிப்பு 15,12,045 பேர். அவர்களில் சிகிச்சை பலனளிக்காது 55,024 பேர் மரணம்.

அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை கடுமையாக வீசத் தொடங்கியது. அதனால், கொரோனா நோயாளிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரித்தனர். திறக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலுவலங்களை மூட வேண்டிய நிர்பந்தம்.

இங்கிலாந்தில் லாக்டெளன் முடிவுக்கு வரும் தேதி இதுதான்!

இதனால், நவம்பர் மாதம் 5 தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி லாக்டெளன் அறிவித்தது அந்நாட்டு அரசு. இந்த லாக்டெளன் தேதி நீடிக்கப்படுமா… அல்லது டிசம்பர் 2–ம் தேதியுடன் முடிக்கப்படுமா என்பது குழப்பமாக இருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அரசுத் தரப்பில் டிசம்பர் 2-ம் தேதியுடன் லாக்டெளன் முடித்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் அக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது.