’தோனிக்கும் விராட் கோலிக்கும் கேப்டன்ஷிப்பில் உள்ள வித்தியாசம் இதுதான்’ கவுதம் கம்பீர்

’தோனிக்கும் விராட் கோலிக்கும் கேப்டன்ஷிப்பில் உள்ள வித்தியாசம் இதுதான்’ கவுதம் கம்பீர்

ஐபிஎல் கொண்டாட்டம் தொடங்க இன்னும் ஐந்தே நாட்கள்தான் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் 2020, ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது.

ரசிகர்கள், விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் என எல்லோரின் கவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் மேலேயே உள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் டீமே வெல்லும் என உறுதிபடக் கூறியுள்ளார். அவர் மட்டுமல்லாது பலரின் கணிப்பும் இந்த ஆண்டு கோப்பை சிஎஸ்கே வுக்கே என்பதுதான்.

’தோனிக்கும் விராட் கோலிக்கும் கேப்டன்ஷிப்பில் உள்ள வித்தியாசம் இதுதான்’ கவுதம் கம்பீர்

சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு முக்கியக் காரணம் மஹேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷிப் தான் என்பது வெளிப்படை. அதனால்தான் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த அணியின் முதல் கேப்டன் ராகுல் டிராவிட். அடுத்து அனில் கும்ப்ளே என கேப்டன்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் கோப்பை கிடைத்தபாடில்லை.

’தோனிக்கும் விராட் கோலிக்கும் கேப்டன்ஷிப்பில் உள்ள வித்தியாசம் இதுதான்’ கவுதம் கம்பீர்

அதிரடி பேட்ஸ்மேனும் தற்போதைய இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, ஆர்சிபி கேப்டன் பொறுப்பேற்று மூன்று ஐபிஎல் தொடர்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் கோப்பை பெங்களூரு பக்கம் வரவே இல்லை.

’தோனிக்கும் விராட் கோலிக்கும் கேப்டன்ஷிப்பில் உள்ள வித்தியாசம் இதுதான்’ கவுதம் கம்பீர்

இதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் பற்றிய கேள்விகள் எழுப்பப்படுவது வாடிக்கையானது. இந்நிலையில் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஒரு பேட்டியில் தோனி, விராட் கோலியின்கேப்டன்ஷிப் பற்றி கருத்து கூறியிருக்கிறார்.

’தோனிக்கும் விராட் கோலிக்கும் கேப்டன்ஷிப்பில் உள்ள வித்தியாசம் இதுதான்’ கவுதம் கம்பீர்

‘எம்.எஸ்.தோனி ஒரு வீரர் திறமையை வெளிப்படுத்த ஆறு அல்லது ஏழு போட்டிகள் வரை வாய்ப்பு கொடுப்பார். ஆனால், விராட் கோலி ஒரு வீரர் ஒன்று அல்லது இரண்டு போட்டியில் ஒழுங்காக ஆடவில்லை என்றால் உடனே மாற்றி விடுவார். இம்முறை அந்த முறையை மாற்றி ஒரு வீரருக்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பார் என்று நம்புகிறேன்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்.