T20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ள நாடு இதுதான்!

 

T20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ள நாடு இதுதான்!

டி20 எனும் மின்னல் வேக கிரிக்கெட் போட்டிகள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு மிகச் சரியான உதாரணம் ஐபிஎல் போட்டிகள்.

கோடைக்காலத்தில் இந்தியாவின் மாபெரும் கேளிக்கை கொண்டாட்டமாக மாறிவிட்டது ஐபில் போட்டிகள். நான்கு மணி நேரத்தில் முடிவடையும் போட்டிகள் ஒரு திரைப்படத்திற்கு இணையான விறுவிறுப்பை அளிக்கின்றன.

T20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ள நாடு இதுதான்!

என்னதான் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பு தந்தாலும் அதில் இந்திய வீரர்களோடு வெளிநாட்டு வீரர்களும் கலந்து ஆடுவார்கள். அப்படி இல்லாது ஒவ்வொரு நாட்டுக்கும் இடையேயான டி20 போட்டிகளே இருநாட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெரும். அதுவும் டி20 உலககோப்பை எனில், உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரையும் ஈர்த்துவிடும்.

இந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

T20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ள நாடு இதுதான்!

ஐசிசி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இந்த ஆண்டு டி20 உலககோப்பைக்கு தேர்வாகிற நாடுகளின் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட உலகக் கோப்பை தொடர் 2022 ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ கொரோனா துயரச் செய்திகள் மத்தியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது வந்துள்ளது.