1 மணி நேரத்துக்கு 140 பேர் கொரோனாவால் மரணம் அடையும் நாடு இதுதான்

 

1 மணி நேரத்துக்கு 140 பேர் கொரோனாவால் மரணம் அடையும் நாடு இதுதான்

கொரோனாவின் கோரத்தாண்டவம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறத். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 83 லட்சத்து 66 ஆயிரத்து 708 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 51 லட்சத்து 28 ஆயிரத்து 966 நபர்கள்.

1 மணி நேரத்துக்கு 140 பேர் கொரோனாவால் மரணம் அடையும் நாடு இதுதான்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 17 லட்சத்து 24 ஆயிரத்து 050 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,15,13,692 பேர்.

அமெரிக்காவில் கொரோனாவில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நேற்று மட்டுமே 1,99,080 பேர் புதிய நோயாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரமாகவே தினமும் சராசரி 2 லட்சம் புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.  அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இவர்களில் 1 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 97 பேர் மட்டுமே குணமடநிதுள்ளனர்.

1 மணி நேரத்துக்கு 140 பேர் கொரோனாவால் மரணம் அடையும் நாடு இதுதான்

நேற்று மட்டுமே 3,376 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதை மணிக்கணக்கில் கணக்கிட்டால் ஒரு மணி நேரத்துக்கு 140 பேர் இறக்கிறார்கள். இவ்வளவு அதிகமானவர்கள் வேறு எந்த நாட்டிலும் இறக்க வில்லை. மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ள நாட்டிலும் இப்படி மரண எண்ணிக்கை அதிகரிப்பது வியப்பைத் தருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 3 லட்சத்து 3- ஆயிரத்து 824 பேர் இறந்திருக்கிறார்கள்.

கலிபோர்னியா, டெக்ஸாஸ், ப்ளோரிடா ஆகிய மாகாணங்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்கள். மூன்றிலுமே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிட்டது.