‘எங்கள் நாட்டில் ஒருவருக்குகூட கொரோனா தொற்று இல்லை’ இப்படிச் சொல்லும் நாடு இதுதான்

 

‘எங்கள் நாட்டில் ஒருவருக்குகூட கொரோனா தொற்று இல்லை’ இப்படிச் சொல்லும் நாடு இதுதான்

உலகம் முழுவதும் கொரோனாவில் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது வல்லரசு நாடுகளுமே கொரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்க படாத பாடு பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 74 லட்சத்து  71 ஆயிரத்து 071 பேர்.    

‘எங்கள் நாட்டில் ஒருவருக்குகூட கொரோனா தொற்று இல்லை’ இப்படிச் சொல்லும் நாடு இதுதான்

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 123 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 77 ஆயிரத்து 509 பேர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது உலகம். இந்த வேளையில் தங்கள் நாட்டில் ஒருவர்கூட கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர் இல்லை என்று பகிரங்கமாக ஒரு நாட்டின் அதிபர் அறிவித்திருக்கிறார்.

‘எங்கள் நாட்டில் ஒருவருக்குகூட கொரோனா தொற்று இல்லை’ இப்படிச் சொல்லும் நாடு இதுதான்

எப்போதுமே மர்மங்கள் நிறைந்தது வட கொரியா. அந்நாட்டின் அதிபர் கிங் ஜன் உன் பற்றிய தவல்கள் பெரும்பாலும் வெளியே வராது. அவர் உயருடன் இல்லை என்றும்கூட செய்திகள் பரவின. பிறகு, அவர் அந்நாட்டின் வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த படங்கள் வெளியாகின.

சமீபத்தில்  வொர்க்ஸ் பார்ட்டி ஆஃப் கொரியா கட்சியின் 75 வது பவளவிழா கொண்டாட்டம் நடந்தது. அதில் அதில் கலந்துகொண்ட அந்நாட்டின் அதிபரும், கட்சியின் தலைவருமான கிங் ஜங் உன் பேசுகையில், ‘உலகமே கொரோனாவால் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில் நம் நாட்டில் ஒருவர்கூட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு நாட்டின் மக்களும் நம் கட்சியுமே காரணம்” என்று தெரிவித்திருக்கிறார்.