10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்கும் நாடு இதுதான்!

 

10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்கும் நாடு இதுதான்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 52 லட்சத்து 83 ஆயிரத்து 201 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரத்து 158 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 68 ஆயிரத்து 359 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,07,61,684 பேர்.

10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்கும் நாடு இதுதான்!

அனைத்து நாடுகளும் கொரோனாவைத் தடுக்க, தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலைக்கு வந்துவிட்டன. அதிலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இன்றைய தேதி வரை அமெரிக்காவில் 3 லட்சத்து 10 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டார்கள்.

இதனால், ஃபைசர் கொரோனா தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டுக்குச் செலுத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது. அது கடந்த சில நாட்களாகச் செலுத்தப்பட்டும் வருகிறது.

10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்கும் நாடு இதுதான்!

இந்நிலையில் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியையும் அமெரிக்காவில் அவசரக் காலப் பயன்பாட்டுச் செலுத்த அனுமதி அளித்திருக்கிறது. இதற்காக, 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வேண்டும் என ஆர்டர் செய்திருக்கிறது அமெரிக்க அரசு.

அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளால், அங்கு கொரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் சில நாட்களிலிருந்து குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.