நாளை தொடங்கும் 2-ம் டெஸ்ட்டுக்கு இவர்தான் கேப்டன்! அணி முழு விவரம் – #IndVsAus

 

நாளை தொடங்கும் 2-ம் டெஸ்ட்டுக்கு இவர்தான் கேப்டன்! அணி முழு விவரம் – #IndVsAus

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 போட்டித் தொடரை வென்றது இந்திய அணி.

டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் போட்டியை மிக மோசமாகத் தோற்றது இந்திய அணி. இதனால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் கேப்டன் விராட் கோலி. ஏனெனில், முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் மனைவி பிரசவத்திற்காக இந்தியா திரும்புகிறார் விராட் கோலி.

நாளை தொடங்கும் 2-ம் டெஸ்ட்டுக்கு இவர்தான் கேப்டன்! அணி முழு விவரம் – #IndVsAus

இந்நிலையில் நாளை தொடங்கும் 2-ம் டெஸ்ட்டுக்கான அணியை விவரம் பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக, இதுவரை துணை கேப்டனாக இருந்த ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓப்பனிங் வீரராக மயங் அகர்வால் மற்று சுப்னம் கில் இருவரும் இறங்குகிறார்கள். அடுத்து புஜாரா களம் இறங்குகிறார். மேலும் அணியில் விஹாரி நீடிக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படாத ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல முதல் போட்டியில் ஆடிய முகம்மது ஷமிக்குப் பதில் சிராஜ் களம் இறங்குகிறார். விக்கெட் கீப்பராக இருந்த சஹாவுக்குப் பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

நாளை தொடங்கும் 2-ம் டெஸ்ட்டுக்கு இவர்தான் கேப்டன்! அணி முழு விவரம் – #IndVsAus

மேலும், உமேஷ் யாதவ், பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோர் நீடிக்கின்றனர். முதல் போட்டியில் மோசமாக ஆடிய ப்ரீத்திவ் ஷா நீக்கப்பட்டிருக்கிறார்.

அணியில், ரஹானே (கேப்டன்), மயங் அகர்வால், ஷப்னம் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, முகம்மது சிராஜ்.

இரண்டாம் டெஸ்ட்டில் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல வேண்டியது அவசியமாக இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா முதல் டெஸ்ட்டில் சொதப்பினார். அவர் இந்த டெஸ்ட்டில் மீண்டெழுவார் என்று நம்பப்படுகிறது. அதேபோல, பல மூத்த வீரர்கள் பரிந்துரைத்த சுப்னம் கில் தொடக்க வீரராக இறங்குவதால் அணியின் ஸ்கோர் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தொடங்கும் 2-ம் டெஸ்ட்டுக்கு இவர்தான் கேப்டன்! அணி முழு விவரம் – #IndVsAus

நாளை தொடங்கும் 2-ம் டெஸ்ட் போட்டி, முகம்மது சிராஜ், சுப்னம் கில் ஆகியோருக்கு முதல் போட்டி. அதனால், இருவரும் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி எடுப்பார்கள். அதேநேரம், சொந்த மைதானம் எனும் வகையில் ஆஸ்திரேலிய அணியும் நம்பிக்கையோடு ஆடும் என்பதில் சந்தேகமில்லை.