10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 9-வது நாடு இதுதான்!

 

10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 9-வது நாடு இதுதான்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 63 லட்சத்து 94 ஆயிரத்து 214 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 34 லட்சத்து 87 ஆயிரத்து 913 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 405 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 11,70,896 பேர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 9-வது நாடு இதுதான்!

இதுவரை எட்டு நாடுகளில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்திருந்தது. தற்போது அதில் 9-வதாக ஒரு நாடு இணைந்துள்ளது.

முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 94,04,823 பேர் பாதிக்கப்பட்டு, 2,36,101 இறந்துள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 81,85,881 பாதிக்கப்பட்டு, 1,22,160 பேர் இறந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 55,35,605 பேர் பாதிக்கப்பட்டு 1,59,902 பேர் இறந்துள்ளனர்.

நான்காம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் 1,636,781 பேர் பாதிக்கப்பட்டு 28,235 பேர் இறந்துள்ளனர். ஐந்தாம் இடத்தில் உள்ள பிரான்ஸில் 13,67,625 பேர் பாதிக்கப்பட்டு 36,788 பேர் இறந்துள்ளனர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 9-வது நாடு இதுதான்!



ஆறாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 12,64,517 பேரும், ஏழாம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் 11,66,924 பேரும் எட்டாம் இடத்தில் உள்ல கொலம்பியாவில் 10,74,184 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

தற்போது 10 லட்சம் பாதிப்புகளைக் கடந்த நாடுகளின் பட்டியில் சேர்ந்திருப்பது இங்கிலாந்து. இங்கிலாந்தில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 660 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 46,555 பேர் பலியாகியுள்ளனர்.

அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசத் தொடங்கிவிட்டது. அதேபோல மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.