10 லட்சம் கொரோனா நோயாளிகள் பட்டியலில் சேர்ந்த 12-வது நாடு இதுதான்!

 

10 லட்சம் கொரோனா நோயாளிகள் பட்டியலில் சேர்ந்த 12-வது நாடு இதுதான்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 905 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 35 லட்சத்து 46 ஆயிரத்து 236 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 65 ஆயிரத்து 186 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,80,61,483 பேர்.

உலகளவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்த நாடுகள் கூடிக்கொண்டே வருகிறது. இதுவரை 11 நாடுகள் என்றிருந்த நிலையில் மாற்றமாகி 12 என்று அதிகரித்திருக்கிறது.

10 லட்சம் கொரோனா நோயாளிகள் பட்டியலில் சேர்ந்த 12-வது நாடு இதுதான்!

முதலிடத்தில் அமெரிக்காவே உள்ளது. இந்த நாட்டில், 1,37,50,404 பேர் கொரோனாவால் பாதிப்பட்டிருக்கிறார்கள். 2,73,072 பேர் இறந்திருக்கிறார்கள்.

இரண்டாம் இடத்தில் இந்தியா. இங்கு, 94,32,075 பேர் பாதிக்கப்பட்டு, 1,37,177 பேர் மரணம் அடைந்துள்ளனர். மூன்றாம் இடம் பிரேசில். அங்கு, 63,14,740 பேர் பாதிக்கப்பட்டு, 1,72,848 பேர் இறந்திருக்கிறார்கள்.

நான்காம் இடத்தில் இடத்தில் ரஷ்யா. ரஷ்யாவில் 22,69,316 பேர் பாதிக்கப்பட்டு, 39,527 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஐந்தாம் இடத்தில் பிரான்ஸ். அங்கு 22,18,483 பேர் பாதிக்கப்பட்டு, 52,325 பேர் இறந்திருக்கிறார்கள்.

ஆறாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 16,46,192 பேரும், ஏழாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டில் 16,17,327 பேரும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளனர்.

10 லட்சம் கொரோனா நோயாளிகள் பட்டியலில் சேர்ந்த 12-வது நாடு இதுதான்!

எட்டாம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் 14,18,807 பேரும், ஒன்பதாம் இடத்தில் உள்ள இத்தாலியில் 15,85,178 பேரும், பத்தாம் இடத்தில் உள்ள கொலம்பியா நாட்டில் 13,08,376 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11- வது இடத்தில் இருப்பது மெக்சிகோ. மெக்சிகோவின் மொத்த பாதிப்ப்பு 11,07,071 பேர். 1,05,655 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இந்தப் பட்டியலில் 12-ம் நாடாக இணைந்திருக்கிறது ஜெர்மனி. இந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 10,55,607 பேர். மரணம் அடைந்தவர்கள் 16,533.