10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 11-வது நாடு இதுதான்!

 

10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 11-வது நாடு இதுதான்!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 59 லட்சத்து 43 ஆயிரத்து 122 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 89 லட்சத்து 63 ஆயிரத்து 186 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 13 லட்சத்து 43 ஆயிரத்து 378 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,56,36,558 பேர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 11-வது நாடு இதுதான்!

உலகளவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்த நாடுகள் கூடிக்கொண்டே வருகிறது. இதுவரை 10 நாடுகள் என்றிருந்த நிலையில் மாற்றமாகி 11 என்று அதிகரித்திருக்கிறது.

முதலிடத்தில் அமெரிக்காவே உள்ளது. இந்த நாட்டில், 1,16,95,711 பேர் கொரோனாவால் பாதிப்பட்டிருக்கிறார்கள். 2,54,255 பேர் இறந்திருக்கிறார்கள்.

இரண்டாம் இடத்தில் இந்தியா. இங்கு, 89,12,907 பேர் பாதிக்கப்பட்டு, 1,31,031 பேர் மரணம் அடைந்துள்ளனர். மூன்றாம் இடம் பிரேசில். அங்கு, 59,11,758 பேர் பாதிக்கப்பட்டு, 1,66,743 பேர் இறந்திருக்கிறார்கள்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 11-வது நாடு இதுதான்!

நான்காம் இடத்தில் பிரான்ஸ். அங்கு 20,36,755 பேர் பாதிக்கப்பட்டு, 46,273 பேர் இறந்திருக்கிறார்கள். ஐந்தாம் இடத்தில் ரஷ்யா. ரஷ்யாவில் 19,71,013 பேர் பாதிக்கப்பட்டு, 33. 931 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆறாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 15,35,058 பேரும், ஏழாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டில் 14,10,732 பேரும் கொரோனாவால் பாதிப்பட்டுள்ளனர்.

எட்டாம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் 13,29,005 பேரும், ஒன்பதாம் இடத்தில் உள்ள இத்தாலியில் 12,38,072 பேரும், பத்தாம் இடத்தில் உள்ள கொலம்பியா நாட்டில் 12,11,128 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 லட்சம் கொரோனா பாதிப்புகளை அடைந்த 11-வது நாடு இதுதான்!

இப்போது 11- வது நாடாக இணைந்திருப்பது மெக்சிகோ. மெக்சிகோவின் மொத்த பாதிப்ப்பு 10,11,153 பேர். இவர்களில் 7,57,951 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 99,026 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

ஏப்ரல் மாதம் முதலே மெக்சிகோவில் கொரோனா அலை வீசி வந்ருகிறது. இடையில் ஓரிரு வாரங்கள் குறைந்தாலும் மீண்டும் அதிகரித்தே வருகிறது.