அதிமுக – பாஜக கூட்டணியில் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் இது ஒன்றுதான்!

 

அதிமுக – பாஜக கூட்டணியில் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் இது ஒன்றுதான்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு கட்சிகள் தள்ளப்படுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலுவாக இருக்கின்றன. இவர்களுக்குள் சிக்கல் வருவதாக இருந்தால் அது தொகுதி பங்கீட்டின்போதுதான். அதனால், இப்போதைக்கு எந்தச் சலசலப்பும் இல்லை.

ஆனால், அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இக்கூட்டணியில், பாஜக மட்டுமே இதுவரை உறுதியாகி உள்ளது. அதை பாஜகவின் மத்திய அமைச்சர் அமித்ஷா வந்தபோது இருதரப்பும் அறிவித்து விட்டன. மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக, தமாகா போன்றவை இன்னும் இழுபறியில்தான் இருக்கின்றன.

இக்கூட்டணியில் உறுதியான பாஜகவும் அதிமுகவுக்குத் தொடர் இடையூறுகளை அளித்துக்கொண்டே இருக்கிறது. தற்போதைய பிரச்சனை முதல்வர் வேட்பாளர் யார் என்பது. பாஜகவின் எல்.முருகன், அண்ணாமலை, குஷ்பு, துரைசாமி போன்றவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர்தான். கூட்டணியின் முதல்வரை விரைவில் அறிவிப்போம் என்கின்றார்கள்.

பாஜகவின் தேசிய தலைவர்கள் இங்கே வரும்போதும் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிச் செல்கிறார்கள். அதனால், இது பூதகரமான சிக்கலாக வந்து நிற்கிறது. இந்தப் பிரச்சனையின் அடிப்படை சிக்கல் ஒன்றுதான்.

அதிமுக – பாஜக கூட்டணியில் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் இது ஒன்றுதான்!

பாஜக கட்டமைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதன் அடிப்படையாக சில விஷயங்களை இந்தியா முழுவதும் பின்பற்றி வருகிறார்கள். மாநில தேர்தல் என்றாலும், அம்மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சியே அங்கு கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது என்றாலும், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட முடிவுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய தலைமையான பாஜக தான் அறிவிக்க வேண்டும் என்று கருதுகிறது. இதுதான் இப்போது நடக்கிறது.

பீகாரில் பாஜகவை விட பெரிய கட்சி நித்திஷ் குமார் கட்சி. ஆனால், நித்திஷ் குமாரை முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது பாஜகதான். அதேபோல, தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி என்றாலும் தான்தான் முதல்வர் வேட்பாளர் அறிக்க வேண்டும் என பாஜக மேலிடம் கருதுகிறது.

அதிமுக – பாஜக கூட்டணியில் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் இது ஒன்றுதான்!

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மாறுபட்டது தமிழ்நாடு என்பதை பாஜகவினர் அடிக்கடி மறந்துவிடுகின்றனர். அதை நினைவூட்டும் விதமாகவே அதிமுக தலைவர்கள் இது பெரியார் மண் என்ற முழக்கத்தையும், திராவிட ஆட்சிக்காலத்தை தேசிய கட்சி இடையூறு செய்ய திட்டமிடுவதாகவும் கூறப்படுவது.

இந்தச் சிக்கல் இப்போதைக்கு தீரும் என்று சொல்ல முடியாது. இன்னும் பல விஷயங்கள் இதில் நடக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.