எதிரி நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 4.5 கோடி கொரோனா தடுப்பூசி கொடுத்து உதவிய இந்தியா!

 

எதிரி நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 4.5 கோடி கொரோனா தடுப்பூசி கொடுத்து உதவிய இந்தியா!

உலகமே கொரோனா பிடியில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தடுப்பூசி விஷயத்தில் அரசியலை புறம் தள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து தெரிவித்துவந்தன. கொரோனா பாதிப்பை உலகின் பிற நாடுகள் முழுமையாக தடுக்க தவறினால் அந்த பாதிப்பு இந்தியாவிலும் தொடரும். எனவே தாம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை அனைத்து நாடுகளுக்கும் சமமாக பகிர்ந்தளிப்பதே மிகப்பெரிய விஷயம் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.

எதிரி நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு 4.5 கோடி கொரோனா தடுப்பூசி கொடுத்து உதவிய இந்தியா!

இந்த சூழலில் கடந்த மாதம் 22 ஆம் தேதி எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுகமான உறவை எட்டப்பட்டதைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க உள்ளதாக இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக அறிவித்தன. இதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில் இந்தியா 4.5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியது. கூடுதல் தடுப்பூசிகள் ஜூனுக்குள் அனுப்பப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது. Gavi என்ற தடுப்பூசி விநியோகிக்கும் தனியார் அமைப்புடன் இந்தியாவிடமிருந்து தடுப்பூசி வாங்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, தற்போது இந்தியா தடுப்பூசியை அனுப்பியுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா இதுவரை 15 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளது, மேலும் சுமார் 25 நாடுகளுக்கு விரைவில் அனுப்பவுள்ளது. பல நாடுகள் மானிய அடிப்படையில் இந்திய தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும், சில நாடுகள் இந்திய அரசாங்கம் நிர்ணயித்த விலையை கொடுத்து வாங்குகின்றனர். பாகிஸ்தானில் 5,92,100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,227 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நாளை (மார்ச் 10) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 4ம் தேதி சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோபார்மை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளித்தது குறிப்பிடதக்கது.