“பழமை, புதுமையுடன் நாடாளுமன்ற கட்டடம் அமையும்” : பிரதமர் மோடி

 

“பழமை, புதுமையுடன் நாடாளுமன்ற கட்டடம் அமையும்” : பிரதமர் மோடி

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

“பழமை, புதுமையுடன் நாடாளுமன்ற கட்டடம் அமையும்” : பிரதமர் மோடி

இந்நிலையில் மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மோடி பின் அங்கு உரையாற்றினார். அதில், எம்.பி.யாக 2014 இல் முதல் முறையாக பாராளுமன்ற வளாகத்திற்கு வர வாய்ப்பு கிடைத்த தருணத்தை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. ஜனநாயகத்தின் இந்த கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, நான் தலை குனிந்து இந்த ஜனநாயக கோவிலுக்கு வணக்கம் தெரிவித்தேன். இந்த வரலாற்று தருணம் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இது பெருமை சேர்க்கும் நாள்.

“பழமை, புதுமையுடன் நாடாளுமன்ற கட்டடம் அமையும்” : பிரதமர் மோடி

புதிய இந்தியாவின் புதிய அடையாளம்தான் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம். இந்தியாவின் பழமை மற்றும் புதுமை கலந்த கலவையாக புதிய நாடாளுமன்ற கட்டடம் இருக்கும் .பாராளுமன்ற கட்டடம் பல முறை புதுப்பிக்கப்பட்டு விட்டது. நேரம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தனக்குள்ளேயே மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சி இது. பழைய பாராளுமன்ற கட்டிடம் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு ஒரு புதிய திசையை அளித்தது.பழைய கட்டிடத்தில், தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய கட்டிடத்தில், 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் லட்சியங்கள் நிறைவேற்றப்படும்” என்றார்.

“பழமை, புதுமையுடன் நாடாளுமன்ற கட்டடம் அமையும்” : பிரதமர் மோடி

தற்போது உள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் முக்கோண வடிவில் ரூ.971 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. 64 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமைய உள்ள புதிய கட்டடம் 2022ல் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைநயம், எரிசக்தி, சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் புதிய நாடாளுமன்றம் அமைய உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888, மாநிலங்களவையில் 543 இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.