ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

உலகமே கொண்டாடும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து எண்ணற்ற திறமையாளர்கள் மைதானத்தில் நிறைந்து வழியும் அற்புதம் நிகழ்வதும்கூட.

சென்ற ஒலிம்பிக் 2016 ஆம் ஆண்டு நடந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதால், அடுத்த ஒலிம்பிக் நடக்க ஜப்பான் – டோக்கியோ தேர்வு செய்யப்பட்டிருந்தது.

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

அதன்படி, இந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை போட்டிகள் நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று காரணமாக அவை அடுத்த ஆண்டு (2021) இதே மாதங்களில் நடத்த ஒத்தி வைக்கப்பட்டது. சில நாடுகள் இன்னும் ஓராண்டு ஒத்தி வைக்க கேட்டன. ஆனால், இதுவே போதுமான இடைவெளிதான் என்று ஒலிம்பிக் நிர்வாகம் மறுத்துவிட்டது.

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

அதற்காக இந்தியாவின் டீம் ஸ்பான்ஸர் யார் என்பதில் கடும்போட்டி நிலவியது. யாருக்கு அது கிடைக்கக்கூடும் என்பதைத் தெரிந்துகொள்ள விளையாட்டு வட்டாரங்கள் ஆர்வம் காட்டின.

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

தற்போது இந்திய அணியின் ஸ்பான்ஸராக ஐநாக்ஸ் குழுமம் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியன் டீம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.