ஐபிஎல் 2020 போட்டிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்டனர் இந்த நிறுவனம்தான்!

 

ஐபிஎல் 2020 போட்டிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்டனர் இந்த நிறுவனம்தான்!

ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளிக்க காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்னும் மூன்றே நாட்களில் தொடங்க விருக்கிறது. வழக்கமாக மைதானங்கள் நிரம்பி வழிய கொண்டாடப்படும் இந்த ஐபிஎல் திருவிழா கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது.

ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் அன்று தொடங்கும் ஐபில் திருவிழாவின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸூம் மும்பை இண்டியன்ஸூம் மோதிக்கொள்வதுதான். இரண்டுமே வலுவான அணிகள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் 2020 போட்டிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்டனர் இந்த நிறுவனம்தான்!

ஐபிஎல் போட்டியை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப ஸ்டார்  குருப் அனுமதிபெற்றிருக்கிறது. ஐபிஎல் போட்டியின் ஸ்ட்ரீமிங் பார்டனராக Yupp TV அறிவிக்கப்பட்டுள்ளது.

Yupp TV ஐபிஎல் போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை மலேசியா, இலங்கை, நேபாளம், பூடான், மத்திய ஆசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் தவிர்த்த தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிப்பரப்ப உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் டிஜிட்டல் வழியாக கோடிக்கணக்கார்க்கு ஐபிஎல் போட்டி லைவ் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2020 போட்டிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்டனர் இந்த நிறுவனம்தான்!

ஐபிஎல் போட்டியில் பல நாட்டு வீரர்களும் கலந்துகொள்வதால், அந்தந்த நாடுகளிலும் இப்போட்டி ஆர்வத்துடன் பார்க்கப்படும் என்பதால், பல நாடுகளின் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் லெமர் டிவி, மலேசியாவில் மியாசட், பங்களா தேஷில் சேனல் 19, ஐக்கிய அமீரகத்தில் BeIN sport,  சிங்கப்பூரில் சிங் டெல், நியூசிலாந்தில் ஸ்கை ஃபோர்ட்ஸ்,  ஹாங்காங்கில் நவ் டிவி உள்ளிட்ட பல சேனல்களுக்கு ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமம் வழங்கியுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.