சாத்தான்குளம் சம்பவம், தனிப்பட்ட சிலரின் தவறா? ஒட்டுமொத்த அமைப்பின் தவறா? என்பது விசாரிக்கப்படும் விதத்தில் தெரிந்துவிடும்- நடிகர் கார்த்தி ட்வீட்..

சாத்தான்குளம் சம்பவம், தனிப்பட்ட சிலரின் தவறா? ஒட்டுமொத்த அமைப்பின் தவறா? என்பது விசாரிக்கப்படும் விதத்தில் தெரிந்துவிடும்- நடிகர் கார்த்தி ட்வீட்..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்படட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் விசாரணையின்போது அடித்துத் துன்புறுத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் குரல் வருகிறார்கள்.

சாத்தான்குளம் சம்பவம், தனிப்பட்ட சிலரின் தவறா? ஒட்டுமொத்த அமைப்பின் தவறா? என்பது விசாரிக்கப்படும் விதத்தில் தெரிந்துவிடும்- நடிகர் கார்த்தி ட்வீட்..

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா, நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் ‘லாக்கப் அத்துமீறல் ஒட்டுமொத்த காவல்துறையின் மான்பை குறைப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியிருந்தார்”.

இந்நிலையில் தற்போது, சூர்யாவின் அறிக்கையைக் குறிப்பிட்டு அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “இந்த வலிமிகுந்த சம்பவமும், ஜெயராஜ் குடும்பத்துக்கு அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் நமது நினைவுகளை நீண்ட நாட்களுக்கு ஆக்கிரமித்திருக்கும். இது ஒரு சில தனிப்பட்டவர்களின் தவறா அல்லது ஒட்டுமொத்த அமைப்பின் தவறா என்பது இந்த வழக்கு எப்படி கையாளப்படுகிறது என்பதன் மூலம் தெரிந்துவிடும்” என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்..