“ஆன் லைன் மோசடியில் 17 வயதில் 70கோடி சம்பாதித்த சிறுவன்” -இதையெல்லாம் நீங்க செஞ்சிருந்தா உங்க அக்கௌண்ட்லேர்ந்தும் அவனுக்கு பணம் போயிருக்கும்

“ஆன் லைன் மோசடியில் 17 வயதில் 70கோடி சம்பாதித்த சிறுவன்” -இதையெல்லாம் நீங்க செஞ்சிருந்தா உங்க அக்கௌண்ட்லேர்ந்தும் அவனுக்கு பணம் போயிருக்கும்

உலகில் பணத்தை பலர் நேர்மையாக சம்பாதிக்கிறார்கள்,பலர் மோசடி செய்து சம்பாதிக்கிறார்கள் .ஆனால் இந்த சிறுவன் சம்பாதித்த விதத்தை கேட்டா ஆச்சர்யப்படுவீங்க
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு ஆன்லைனில் உள்ள அத்தனை கிரிமினல் விஷயங்களும் அத்துப்படி .அவன் இணையத்தளத்தை பயன்படுத்தி அடுத்தவர் அகௌண்டிலிருந்து 70 கோடி ரூபாய் ஆட்டைய போட்ட விஷயம் கேட்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் .

“ஆன் லைன் மோசடியில் 17 வயதில் 70கோடி சம்பாதித்த சிறுவன்” -இதையெல்லாம் நீங்க செஞ்சிருந்தா உங்க அக்கௌண்ட்லேர்ந்தும் அவனுக்கு பணம் போயிருக்கும்
இந்த சிறுவன் முதலில் ஒரு சிம்கார்டு வாங்குவான் ,பிறகு அதிலிருந்து பலருக்கு மெசேஜ் பறக்கும். ,உங்களுக்கு ஆடம்பர கார் வேண்டுமா,?இல்லை வெளிநாடு இலவச டூர் போகனுமா? .இல்ல உங்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வேண்டுமா?நீங்க ஸ்லிம்மா அழகா ஆகணுமா ?உங்களுக்கு பத்து நாளில் தொப்பை குறையணுமா ? வேலை வேண்டுமா ? அப்படின்னா இந்த லிங்க் க்ளிக் பண்ணுங்க அப்படின்னு பலருக்கு மெசேஜ் அனுப்புவான் .அதில் ஆடம்பரத்துக்கு ஆசைப்படும் சிலர் இந்த லிங்க க்ளிக் பண்ணுவார்கள் .அப்போது அவரின் போன் நம்பர் மூலம் இணைக்கப்பட்டுள்ள அவர்களின் கூகுள் பே ,பேடிஎம் ,மற்றும் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்வான்.பிறகு அந்த சிம் கார்டை தூக்கிபோட்டுவிட்டு வேறு சிம் கார்டு வாங்கி அதன் மூலம் பலருக்கு இப்படி மெசேஜ் அனுப்பி ஏமாற்றுவான் ,இப்படியே அவன் 70 கோடி ரூபாயை இந்த சிறு வயதில் சம்பாதித்துள்ளான் .அதனால் உங்களுக்கு இதுபோல் மெசேஜ் வந்து லிங்க் வந்தால் அதை க்ளிக் பண்ணாமல் உஷாரா இருக்கும்படி சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர் .

“ஆன் லைன் மோசடியில் 17 வயதில் 70கோடி சம்பாதித்த சிறுவன்” -இதையெல்லாம் நீங்க செஞ்சிருந்தா உங்க அக்கௌண்ட்லேர்ந்தும் அவனுக்கு பணம் போயிருக்கும்