ஐடிஎஃப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா? அப்ப இனி மாதந்தோறும் வருமானம்

ஐடிஎஃப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா? அப்ப இனி மாதந்தோறும் வருமானம்

சேமிப்பு கணக்குகளுக்கு மாதந்தோறும் வட்டி வழங்கவுள்ளதாக ஐடிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

ஐடிஎஃப்சி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா? அப்ப இனி மாதந்தோறும் வருமானம்

அனைத்து வங்கிகளும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஒவ்வொரு காலாண்டு இறுதியிலும் வட்டி வழங்கி வருகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்தலாம். ஆனால் பெரும்பாலான வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்துவதில்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வட்டி வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ஐடிஎஃப்சி வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களில் சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பு தொகை மாதந்தோறும் வட்டி வழங்க இருப்பதாக அந்நிறுவன இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் வட்டி கணக்கிடப்பட்டு அந்த கூட்டுத் தொகையை ஒரு மாதம் கழித்து மொத்தமாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என வங்கி நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளது.