ஜூன் 5 ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை!

 

ஜூன் 5 ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை!

முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில். அங்கிருக்கும் மலையே சிவ பெருமனாக கருதப்படுவதால், மக்கள் அனைவரும் மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். 14 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை முழு நிலவு (பௌர்ணமி) அன்று சுற்றி வருவதே உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. அதன் படி கடந்த மே மாதம் 6 ஆம் தேதியன்று சித்ரா பெளர்ணமி வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு அரசு உத்தரவிட்டதால், அன்று மக்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார்.

ஜூன் 5 ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை!

மாதந்தோறும் பெளர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கிரிவலம் செல்வார்கள். அதன் படி இந்த மாதமும் வரும் 5 ஆம் தேதி பெளர்ணமி வருகிறது. இந்த நிலையில், 3 ஆவது முறையாக பெளர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.