திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது!

 

திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது!

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. 3500 கிலோ நெய்,1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. நவம்பர் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத்திருவிழா இறுதி நிகழ்ச்சியான மகாதீபத்துடன் நிறைவு பெற்றது. இன்று ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும் என சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பொதுமக்கள் வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக, வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின்றி தீபம் ஏற்பட்டது.