கவுதம நதியில் தீர்த்தவாரி கண்டருளிய அருணாச்சலேஸ்வரர்… திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

 

கவுதம நதியில் தீர்த்தவாரி கண்டருளிய அருணாச்சலேஸ்வரர்… திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

திருவண்ணாமலை

மாசி மகத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கவுதம நதியில் அருணாச்சலேஸ்ரர் சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, திருப்பணியில் ஈடுபட்ட வள்ளால மகாராஜாவுக்கு, ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் சுவாமி திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், பின்னர் தீர்த்தவாரியும் நடைவெறுவது வழக்கம். அதன்படி, நேற்று மாசி மகத்தையொட்டி, அருணாசலேஸ்வரர் சந்திரசேகரர் அலங்காரத்தில், உண்ணாமுலையாள் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கவுதம நதியில் தீர்த்தவாரி கண்டருளிய அருணாச்சலேஸ்வரர்… திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…

தொடர்ந்து, உற்சவர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு சென்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதிக்கு சென்றடைந்தார். அங்கு, நதி கரையில் வள்ளால மகாராஜாவுக்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுத்தை தொடர்ந்து, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தது.

இதனையொட்டி, கோயில் அர்ச்சகர்கள் கவுதம நதியில் திரிசூலத்தை புனித நீரில் மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதேபோல், கதவும நதியின் கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து, வழிபாடு நடத்தினர்.