திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு; திருவள்ளூரிலும் வேகமெடுக்கும் கொரோனா!

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு; திருவள்ளூரிலும் வேகமெடுக்கும் கொரோனா!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக தேனி, மதுரை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கி, தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மதுரை மாவட்டத்துக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் முதல்வர் சென்றார். நாளை மற்ற 2 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு; திருவள்ளூரிலும் வேகமெடுக்கும் கொரோனா!

இந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. திருவள்ளூரில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு 15,896 ஆக அதிகரித்துள்ளது. அம்மாவட்டத்தில் இதுவரை 11,759 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல திருவண்ணாமலை மாவட்டத்திலும் மேலும் 153 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,058 ஆக அதிகரித்துள்ளது.