திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுத்தால் மாநில அரசு ஒத்துழைக்காது! – பினராயி விஜயன் அதிரடி

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுத்தால் மாநில அரசு ஒத்துழைக்காது! – பினராயி விஜயன் அதிரடி

திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தை தனியாருக்கு வழங்கினால் விமான நிலையத்துக்கு மாநில அரசு எந்த ஒரு ஒத்துழைப்பையும் வழங்காது என்று பினராயி விஜயன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுத்தால் மாநில அரசு ஒத்துழைக்காது! – பினராயி விஜயன் அதிரடி
மத்திய அரசு லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை எல்லாம் தனியாருக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் சர்வ தேச விமான நிலையத்தை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கேரள அரசின் எதிர்ப்பையும் மீறி தனியாருக்கு கொடுத்தே தீருவது என்று மத்திய அரசு முடிவுடன் உள்ளது.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம்

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுத்தால் மாநில அரசு ஒத்துழைக்காது! – பினராயி விஜயன் அதிரடி

ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “மத்திய அமைச்சரவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவது என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது கேரள மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுத்தால் மாநில அரசு ஒத்துழைக்காது! – பினராயி விஜயன் அதிரடி
இந்த விமான நிலையத்தின் பங்குதாரர்களில் கேரள அரசும் ஒருவர். இந்த விமான நிலையத்தை அமைக்க 23.57 ஏக்கர் நிலத்தை விமானநிலைய ஆணையத்துக்கு கேரள அரசு இலவசமாக வழங்கியது. நிலத்தின் மதிப்பை கேரளாவின் பங்காகக் கருத வேண்டும்.
கேரள அரசு மற்றும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக இந்திய அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு வழங்கினால், அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்குவது என்பது சாத்தியமில்லாததாகிவிடும். எனவே, தனியாருக்கு குத்தகைக்கு வழங்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.