என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து நமக்கான வாழ்வியல் நெறிமுறைகளை அருளியவர். இப்போது இருப்பது போல தொழில்நுட்ப வசதிகள் அப்போது இல்லாததால் தான் திருவள்ளுவரே ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு திருக்குறள் எழுதினார். இப்படியிருக்கையில் அவரின் உருவத்தை மட்டும் யார் பார்த்திருப்பார்கள்.

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

இதனால் ஒவ்வொருவரும் தங்கள் மதக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு திருவள்ளுவருக்கு பூணூல் போடுகிறார்கள். சிலர் பட்டை போடுகிறார்கள். தற்போது அவருக்கு மொட்டை அடித்து குடுமி வளர்த்திருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் அப்படித் தான் திருவள்ளுவரின் உருவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. நெற்றி, கைகளில் பட்டை, மார்புக்குக் குறுக்காக ருத்ராட்ச கொட்டை ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார். அந்தணர் போல முழுவதுமாக மொட்டையடித்து தலையின் பின்புறத்தில் மட்டும் குடுமியுடன் வரைந்திருக்கிறார்கள். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜகவினர் வெளியிட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது சிபிஎஸ்இ புத்தகத்தில் வரையப்பட்டிருக்கும் படம் இணைந்திருக்கிறது. அறிவில் சிறந்த முன்னோர்களைச் சொந்தம் கொண்டாடும் அடையாள அரசியல் இன்று நேற்று இல்லை பல நூற்றாண்டுகளாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாண ஆட்சியர் எல்லிஸ் தான் அதனைத் துவக்கிவைத்தவர். திருவள்ளுவரை சமண மதத்தைச் சேர்ந்த முனிவராகப் பாவித்து உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார். அதற்காக அவர் எந்தச் சான்றையும் மதிப்பிட்டு வரைந்ததாகத் தெரியவில்லை. 1900 வாக்கில் திருவள்ளுவரை சைவ சமயத்தவர்கள் சொந்தம் கொண்டாட தொடங்கினர்.

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

1904ஆம் ஆண்டு இந்து தியாலாஜிகல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த கோ. வடிவேலு செட்டியார் என்பவர், ‘திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்’ என்ற நூலை வெளியிட்டார். அந்த நூலிலேயே நெற்றியில் பட்டையுடன் திருவள்ளுவர் காட்சியளித்தார். இதே நூலின் ஆங்கில பதிப்பில் முழு சைவ அடிகளாராகத் திருவள்ளுவரை வரைந்து வைத்திருந்தனர்.

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

1950களுக்குப் பிறகே திருவள்ளுவரை மத அடையாளத்துக்குள் அடைக்கக் கூடாது என்ற பிரக்ஞை எழு ஆரம்பித்தது. அதற்கு முக்கியக் காரணம் கவிஞர் பாரதிதாசனும் திராவிட கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வனும். இவர்கள் இருவரும் வேணுகோபால் சர்மா என்ற ஓவியரை அணுகிய பின்பே நாம் தற்போது காணும் திருவள்ளுவரின் உருவம் கிடைக்கப் பெற்றது. இதற்காக திருக்குறள் திருவுருவப் பட விளக்கம் என்ற வெளியீடும் கொண்டுவரப்பட்டது. காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலருக்கும் இந்தப் படம் பிடித்துப் போய்விட்டது.

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

1960ஆம் ஆண்டு திமுக அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் திமுக வந்த பிறகே திருவள்ளுவர் படத்தை அங்கு நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கோரிக்கை வைத்தவர் கருணாநிதி. கோரிக்கையின் அடிப்படையில் 1964ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சட்டப்பேரவையில் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அப்போதைய குடியரசு துணைத் தலைவரான சாகிர் உசேன் திறந்துவைத்தார். அதன்பின் கருணாநிதி முதல்வரான பிறகு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அது உருமாறியது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

என்னது இது திருவள்ளுவரா? சிபிஎஸ்இ புத்தகத்தில் இடம்பெற்ற ‘குடுமி’ திருவள்ளுவர்!

திருவள்ளுவர் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பார். உச்சி கோபுரத்தைப் போல நீண்ட நெடிய கொண்டை, தூய தாடி சகிதம் கொண்டிருப்பார். ஒரு பலகையில் அமர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி, மறு கையில் எழுத்தாணி தலைக்குப் பின்னால் அறிவொளி என பார்க்கவே அம்சமான உருவத்தில் திருவள்ளுவர் இருப்பார். அப்படிப்பட்ட கம்பீரமான திருவள்ளுவரின் உருவத்தைத் தான் சிபிஎஸ்இ புத்தகத்தில் அலங்கோலப்படுத்தியிருக்கிறார்கள்.