Home மாவட்டங்கள் திருவள்ளூர் கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு

கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்

கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது நெஞ்சில் பந்துபட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(24). இவர் அதேபகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் பந்து பட்டத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு

தகவலின் பேரில் மருத்துவமனைக்கு சென்ற புல்லரம்பாக்கம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, லோகநாதனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டடது. உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

கிரிக்கெட் பந்து நெஞ்சில் பட்டதில், இளைஞர் உயிரிழப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...

“வேண்டும்… வேண்டும்… அமைச்சர் பதவி வேண்டும்” – சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம்… புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...

பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும்...

“அன்புள்ள மு.கருணாநிதி” – பள்ளியில் ஆய்வுசெய்த கலெக்டருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் நோட்!

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 'தூங்காமை, கல்வி, துணிவுடைமை…...
- Advertisment -
TopTamilNews