திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி தங்களை தானே காத்துக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அரசின் அதிரடி நடவடிக்கை மூலம் சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து விட்டது. ஆனால் இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து விட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!tr

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அம்மாவட்டத்தில் மேலும் 455 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 19,413 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஆவடியில் 86 பேரும், கும்மிடிப்பூண்டியில் 57 பேரும் பூவிருந்தமல்லியில் 47 பேரும் பாதிக்கப்பட்டனர். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 14,731 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் தற்போது 3,903 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.