கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்

 

கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவள்ளூர்

கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்கம் முழுக்கொள்ளளவை எட்டி வருவதால் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்

இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக, நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, கொசஸ்தலை ஆற்றின் இடையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு, கரிம்பேடு மேம்பாலங்களையும், நெடியம், சாமந்தவாடா, சங்கீதகுப்பம், கீழ்கால்பட்டடை ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களின் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்

அப்போது, கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்கள் வலுவிழைந்து காணப்படுவதால், கரையோர கிராமமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என கேட்டுகொண்ட அவர், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் தடுப்புவேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.