திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்: ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு

 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்: ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சென்னையில் அருகாமையில் அமைந்திருக்கும் மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடல்: ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு

இதனால் சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்திருந்தார். அதன் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாகவும் ஊழியர்கள் இன்று வர வேண்டாம் என்றும் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும், கிருமிநாசினி தெளிப்பு பணி நேற்று நடந்ததால் இன்று அலுவலகம் மூடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.