திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா – பிப்.,1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா – பிப்.,1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 174-வது ஆராதனை விழா வரும் பிப்ரவரி 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திருவையாறில் தியாகராஜர் முக்தி அடைந்த இடத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்து பந்தக்கால் நடப்பட்டது. இதில், தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா அறங்காவலர் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா – பிப்.,1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழுவினர், ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 174-வது ஆராதனை விழா வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆகிய 2 நாட்கள் நடைபெறுவதாக அறிவித்தனர். வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும் இந்த ஆராதானை விழா, நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 நாட்களாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

தியாகராஜர் சித்தியடைந்த பிப்ரவரி 2ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெறுவதாகவும், இதில் கொரோனா வழிகாட்டுதலின்படி 200 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.