’திருவையாறு- 3’ குட்டை ரக தென்னை மரம் அறிமுகம்: இரண்டரை ஆண்டுகளில் காய்ப்பு!

 

’திருவையாறு- 3’ குட்டை ரக தென்னை மரம் அறிமுகம்: இரண்டரை ஆண்டுகளில் காய்ப்பு!

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு தென்னை தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை திருவையாறு- 1 , திருவையாறு- 2 என்ற பெயரில் இரண்டு தென்னை ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது . தற்போது திருவையாறு- 3 என்ற குட்டை ரக தென்னை மரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

’திருவையாறு- 3’ குட்டை ரக தென்னை மரம் அறிமுகம்: இரண்டரை ஆண்டுகளில் காய்ப்பு!

இது குறித்து ஆய்வாளர் செல்வம் நம்மிடம் பேசியபோது, தற்பொழுது காலநிலை தென்னை கன்றுகளை நடுவதற்கு சாதகமாக உள்ளது. திருவையாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் வேலையாட்களின் பற்றாக்குறையை போக்கும் வகையில் திருவையாறு 3 என்ற குட்டை தென்னை ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரகம் இரண்டரை ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும் வரட்சியைத் தாங்கி வளரும்.

தென்னை குலைகள், தென்னை மட்டை மீது படிவதால் சிறுவர்கள் கூட பறிக்கும் அளவில் உயரம் குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. 45 நாட்களுக்கு இரண்டு குலை காய்ப்புக்கு வரும் . ஆயிரம் தென்னை மரங்கள் வைத்தால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 50 ஆயிரம் காய்கள் பறிக்கலாம். இதன் மூலம் 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் . விவசாயிகள் இந்த வகை தென்னை மரங்களை நடலாம் என திருவையாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சிபாரிசு செய்வதாக