darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



பாடல்பெற்ற தலங்கள் வரிசை 15 திருக்கோலக்கா திருமணத் தடைகளை அகற்றும் தலம்.

திருத்தாளமுடையார் கோவில்
திருத்தாளமுடையார் கோவில்

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு மேற்கே இரண்டு கி.மீ தொலைவில் உப்பனாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. திருத்தாளமுடையார் கோவில் என வழங்கப்படும் இந்தக் கோவில் ஒற்றைப் பிரகாரத்துடன் 70 செண்ட் பரப்பளவில் கட்டப்பட்டு இருக்கிறது. ராஜகோபுரம் இல்லை.மூலவர் சுயம்புலிங்கமாக சப்தபுரீசுவரர்.அம்மை ஓசை கொடுத்த நாயகி.தீர்த்தம் சூரிய தீர்த்தம் ,கோவில் வாசலில் அமைந்திருக்கிறது.

1

கோவில் கிழக்கு நோக்கியது.சப்தபுரி என்றும் ஒரு பெயருண்டு திருஞானசம்பந்தன்  ஞானப்பாலுண்டு தமிழ் பதிகங்கள் பாடத்தொடங்கியதும் மூன்று வயதில் தீர்த்த யாத்திரையாக முதலில் வந்தது இந்தக் கோவிலுக்குத்தான்.மூன்று வயது ஞானசம்பந்தன் தன் சின்னஞ்சிறு கைகளால் தாளமிட்டபடி பாடுவதைப் பார்த்த ஈசன் அந்த கைகள் வலிக்குமென்று பொன்னாலான இரண்டு தாளங்களைத் தந்தால் அவர் தாளபுரீசுவரர் ஆனார்.அந்தத் தாளங்களுக்கு தெய்வீக இசை ஓசையை கொடுத்ததால் அம்மை ஓசை கொடுத்த நாயகி.

2


இதே கோவிலில், பிற்காலத்தில் தன் ஊமையாய் பிறந்த தன் மகனுக்கு பேச்சு வரவேண்டும் என்று ஒரு தாய் வேண்டிக்கொள்ள,அவள் மகன் பேசத் துவங்கிவிட்டானாம்.அதற்காக அந்த பெண்மணி இந்தக் கோவிலுக்கு தங்கத்தாலான இரண்டு தளங்கள் செய்து கொடுத்திருக்கிறார். அவை இப்போதும் கோவிலில் இருக்கின்றன.
அடுத்த சிறப்பு இந்தக் கோவிலுக்குள் இருக்கும் மகாலட்சுமி ஆலயம்.மகாலட்சுமி இந்தத் தலத்திற்கு வந்து தவம் செய்துதான் மகாவிஷ்ணுவின் மனைவி ஆனாளாம்.அப்படி திருமணக்கோலத்தில் அவர்கள் காட்சி தந்ததால் இத்தலத்துக்கு திருக்கோலக்கா என பெயர் ஏற்பட்டது.அதனால் திருமண தடையால் துன்பப்படும் பெண்கள் ஒன்பது வாரம் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இக் கோவிலில் இருக்கும் மகாலட்சுமியை வணங்கினால் தடைகள் நீங்கி அவர்களது திருமணம் இனிதே நடக்கும்

3


சீர்காழி திருமுலைப்பால் திருவிழாவின்போது திருஞான சம்பந்தர் இத்தலத்துக்கு எழுந்தருளுவார். தினந்தோறும் நான்குகால பூஜை நடைபெறுகிறது. தேவாரப் பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்களுள் இது 15வது தலம்

2018 TopTamilNews. All rights reserved.