சசிகலா விடுதலை- திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 

சசிகலா விடுதலை- திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருப்பத்தூர்

சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதை அடுத்து, திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, தண்டனை காலம் நிறைவடைந்து இன்று விடுதலையானார். இதனை தமிழகம் முழுவதும் உள்ள அமமுக கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாகளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அந்த கட்சியின் நகர செயலாளர் அக்‌ஷயா முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சசிகலா விடுதலை- திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தொடர்ந்து பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமமுகவின் சிறுபான்மையினர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.