இரவு நேரத்தில் ரகசியமாக நடக்கும் மணல் திருட்டு! அதிகாரிகள் உடந்தையா ?

 

இரவு நேரத்தில் ரகசியமாக நடக்கும் மணல் திருட்டு! அதிகாரிகள் உடந்தையா ?

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில், மணல் கொள்ளையை தடுக்க போலீசார் தீவிட கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போலீசாரின் கண்களை மண்ணைத் தூவும் மணல் கடத்தல் கும்பல், இரவு நேரத்தில் ரகசியமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறது.பாலாற்றில் மணல் அள்ளிவந்த கும்பலை போலீசார் கட்டுப்படுத்திய நிலையில், தற்போது தனியார் நிலங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மேல்கிருஷ்ணாபுரம் சாமியார் மடம் அருகில் பல தனியார் இடங்களை இந்த கும்பல் குறிவைத்து மணல் திருடி வருகிறது. அங்குள்ள தனியார் நிலங்களில் குழி வெட்டியும், கிணறு போல குழி தோண்டியும் மணல் அள்ளுகின்றனர். மாட்டு வண்டியில் மணல் திருடும் அந்த கும்பல், தினமும் இரவு நேரத்தில் மட்டும் வேலை செய்து வருகிறது. போலீசார் வருவதை அறிந்து, அவ்வப்போது இடங்களை மாற்றி மணல் அள்ளி வருகின்றனர்.

இரவு நேரத்தில் ரகசியமாக நடக்கும் மணல் திருட்டு! அதிகாரிகள் உடந்தையா ?

இது தொடர்பாக நில உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டும் மக்கள் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.