“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

 

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சிவன்அருள் தெரிவித்தார்.

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர், நிர்வாக வசதிக்காக கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியராக சிவன் அருள் மற்றும் எஸ்.பியாக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டம் உருவாக்கப்பட்டு ஒராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின் வருவாய், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சாலை வசதியை மேம்படுத்தும் விதமாக வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் இருந்து சேலம் வரை 4 வழிச் சாலைக்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

மேலும், திருப்பத்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பாதாள சாக்கடை திட்டம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் கூறினார். திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்


தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திலேயே பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு பிரிவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்து பரிசு பெற்றுள்ளதாகவும், மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புதிய கட்டப்பட்டு வரும் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவலுவலகங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்த ஆட்சியர், நடப்பாண்டில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 245 இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்க உள்ளதாகவும், மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவரவும் முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.