Home அரசியல் ”எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை… பிறகு எதற்காக முதல்வர் வேட்பாளருக்கு குடுமிப்பிடி”

”எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை… பிறகு எதற்காக முதல்வர் வேட்பாளருக்கு குடுமிப்பிடி”

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக எப்படியும் ஆட்சிக்கு வரப் போவதில்லை இந்த நிலையில் யார் முதல்வர் வேட்பாளர் என ஏன் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாநகரில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கும், உபி முதல்வர் யோகி ஆதியத்நாத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானம் இல்லாமல் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல்காந்தியை காவல்துறை அதிகாரிகள் தள்ளி, தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதியை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை செயல்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.

எதிர்காலத்தில் பிரதமராக வரவேண்டும் என மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் ஆசைபட கூடியவர் ராகுல். ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். பாதிக்கபட்ட பெண் வீட்டிற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் பெண்களை பாதுகாக்க சட்டம் இயற்றபடவேண்டும் என்றார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கே வரபோவதில்லை, முதலமைச்சர் பதவியும் கிடைக்க போவதில்லை. கிடைக்காத பதவிக்கு ஏன் இந்த குடிம்பிடி சண்டை போடுகிறார்கள்?ஜெயலிலதா உயிருடன் இருந்தாலே அதிமுக ஆட்சிக்கு வரபோவதில்லை. அதிமுகவில் தொண்டர்கள் உள்ளனர் ஆனால் தலைவர் தான் இல்லை. எடப்பாடியும், ஓபிஎஸும் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் இல்லை.

எங்களுடைய கூட்டணியில் ஸ்டாலின் தான் தலைவர் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் தான் முதல்வர். இதில் எந்த சந்தேகமும் இல்லை” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

பிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...

மீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக...

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை...

“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!