”எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை… பிறகு எதற்காக முதல்வர் வேட்பாளருக்கு குடுமிப்பிடி”

 

”எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை… பிறகு எதற்காக முதல்வர் வேட்பாளருக்கு குடுமிப்பிடி”

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக எப்படியும் ஆட்சிக்கு வரப் போவதில்லை இந்த நிலையில் யார் முதல்வர் வேட்பாளர் என ஏன் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணாநகரில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கும், உபி முதல்வர் யோகி ஆதியத்நாத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானம் இல்லாமல் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல்காந்தியை காவல்துறை அதிகாரிகள் தள்ளி, தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதியை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை செயல்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.

”எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை… பிறகு எதற்காக முதல்வர் வேட்பாளருக்கு குடுமிப்பிடி”

எதிர்காலத்தில் பிரதமராக வரவேண்டும் என மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் ஆசைபட கூடியவர் ராகுல். ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். பாதிக்கபட்ட பெண் வீட்டிற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் பெண்களை பாதுகாக்க சட்டம் இயற்றபடவேண்டும் என்றார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கே வரபோவதில்லை, முதலமைச்சர் பதவியும் கிடைக்க போவதில்லை. கிடைக்காத பதவிக்கு ஏன் இந்த குடிம்பிடி சண்டை போடுகிறார்கள்?ஜெயலிலதா உயிருடன் இருந்தாலே அதிமுக ஆட்சிக்கு வரபோவதில்லை. அதிமுகவில் தொண்டர்கள் உள்ளனர் ஆனால் தலைவர் தான் இல்லை. எடப்பாடியும், ஓபிஎஸும் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் இல்லை.

எங்களுடைய கூட்டணியில் ஸ்டாலின் தான் தலைவர் எங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் தான் முதல்வர். இதில் எந்த சந்தேகமும் இல்லை” எனக் கூறினார்.