“அதிமுகவையும், அக்கட்சி தலைவர்களையும் கேவலப்படுத்திவரும் பாஜக! எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தா இதெல்லாம் நடக்குமா?”

 

“அதிமுகவையும், அக்கட்சி தலைவர்களையும் கேவலப்படுத்திவரும் பாஜக! எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தா இதெல்லாம் நடக்குமா?”

திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், 96வது பிறந்தநாள் கொண்டாடும் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்பி, “நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் தற்போதும் அதே கூட்டணியில் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தல் 2021ல் தொடரும். ரஜினியிடம் நேற்று பேசினேன். நண்பர் என்கிற முறையில் விசாரித்தேன். ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். ரஜினியும் ஆரம்பிக்கிறேன் என கூறியுள்ளார். அவர்கள் எதிர்காலம் எவ்வாறு இருக்கும், கட்சி எவ்வாறு இருக்கும் என சொல்ல நான் ஜோசிய காரன் இல்லை. ஜோசியம் பார்க்க தெரியாது. எத்தனை முனை போட்டி வந்தாலும் முதல் முனையில் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெரும்.

“அதிமுகவையும், அக்கட்சி தலைவர்களையும் கேவலப்படுத்திவரும் பாஜக! எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தா இதெல்லாம் நடக்குமா?”

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்து பலம், பலவீனம் என கூறிவிட முடியாது. திமுக, அதிமுக ஒரு சீட் வென்ற வரலாறு கூட உண்டு. 136 வருட பாரம்பரிய கொண்ட கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் வேறு மக்கள் வேறு இல்லை. இந்தியா முழுவதும் காங்கிரஸ் வலுவாக உள்ளது. புதுச்சேரியில் இரட்டை ஆட்சி முறை நடந்து வருகிறது. ஆட்சியை முறையாக பாஜக நடத்த விடுவதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை செயல்பட விடவில்லை. தற்போது தமிழகத்தில் நடைபெறும் அரசும் எம்.ஜி.ஆர் அரசு கிடையாது. ஜெயலலிதா அரசும் கிடையாது. பாஜகவின் அடிமை அரசு. பாஜகவின் துணை அரசாக மாநில அரசு செயல்படுகிறது. அனைவர் மீதும் ஊழல், வழக்கு உள்ளதால் பயந்து விவசாய சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

தொகுதி பற்றியோ எண்ணிக்கை பற்றியோ பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. அதற்கான குழுக்கள் இனிதான் அமைக்கப்படும். பெரும்பான்மையான இடங்களில் அதிமுக தொகுதியில் நிற்கும். பாஜகவுடன் கூட்டணி தொடரும் என கூறிய பிறகு, சிறிய எண்ணிக்கையிலான தொகுதிகளை பெறப் போகும் பாஜக, முதல்வர் யார் என நாங்கள் முடிவு செய்வோம் என கூறுவது, அதிமுகவையும், அதன் தற்போதைய தலைவர்களையும் கேவலப்படுத்துவது போன்றதாகும். எம்.ஜிஆர், ஜெயலலிதா இருந்தால் இவ்வாறு சொல்ல முடியுமா? எவ்வளவு பலவீனமான தலைவர்கள் அதிமுகவில் உள்ளனர் என கூறுவதற்கு இதை விட சிறந்த உதாரணத்தை காட்ட முடியாது. இதை அமைச்சர்கள் சகித்துக்கொள்ளலாம். ஆனால் அதிமுக தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்” எனக் கூறினார்.