கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைக்கிறாரா?- திருநாவுக்கரசர்

 

கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைக்கிறாரா?- திருநாவுக்கரசர்

முதல்வர் வேட்பாளரை பாஜக எவ்வாறு தேர்வு செய்ய முடியும்?- என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், “மத்தியில் ஆளும் மைனாரிட்டி பாஜக அரசு, தமிழக முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய நினைப்பது அராஜகம், சர்வாதிகாரத்தின் உச்சம்.

கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைக்கிறாரா?- திருநாவுக்கரசர்

இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணித்து பிற மாநில மொழிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசு செயல்படுகிறது. திமுக கூட்டணி எங்களுக்கு கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கும் என நம்புகிறோம். திமுக கூட்டணியில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை” எனக் கூறினார்.

திமுக கூட்டணியில் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி இணையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் அதனை திமுக தான் முடிவு செய்யும் என்றார்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவரிடையே சில சமரசங்கள் நடைபெற்று, எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளர் என பன்னீர்செல்வமே அறிவித்தார். ஆனால் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளார் மட்டுமே எடப்பாடி. கூட்டணியின் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்று தெரிவித்தனர்.