ஆக்ஸிஜன் தயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே – திருமாவளவன்

 

ஆக்ஸிஜன் தயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே – திருமாவளவன்

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி, அதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி போராடிய மக்களை போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வேதாந்தா நிறுவனமோ உச்சநீதிமன்றத்தில் நாடியது. ஆனால் தமிழக அரசோ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆக்ஸிஜன் தயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே – திருமாவளவன்

இந்த சூழலில் தற்போது கொரோனா பரவலை சாதமாக பயன்படுத்திக்கொண்ட ஸ்டெர்லைட் ஆலை, ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனைவருக்கும் இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறோம் ஆகவே தயவு செய்து ஆலையை திறக்க அனுமதி கொடுங்கள் என ஸ்டெர்லைட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதனால் மத்திய அரசும் ஆலையை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “மோடி அரசே, மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளாதே. ஆக்ஸிஜன் தாயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே. ‘ஆயிரம்பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவிடமாட்டோமென’ கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையைக் கிழிக்கட்டும்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.