‘கோவாக்சின் விநியோகத்திற்கு என்ன அவசரம்? செஞ்சோற்றுக் கடனா?’ – திருமாவளவன் ட்வீட்!

 

‘கோவாக்சின் விநியோகத்திற்கு என்ன அவசரம்? செஞ்சோற்றுக் கடனா?’ – திருமாவளவன் ட்வீட்!

மூன்றாம் கட்ட பரிசோதனை முடியாமலேயே கோவாக்சின் மருந்து விநியோகம் செய்யப்பட்டது ஏன்? என விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” #என்னஅவசரம்? இன்னும் மூன்றாவது கட்ட சோதனை முடியாமலேயே ஏன் #கொவேக்சினை விநியோகம் செய்யவேண்டும்?. ‘அந்த உண்மையைத் தெரிந்தே மருந்தை எடுத்துக் கொள்கிறோம் ‘ -என்று மக்களிடமே இசைவு உறுதிமொழி கேட்பது சரியா? இது #பாரத்பயோடெக் நிறுவனத்துக்குச் செய்யும் செஞ்சோற்றுக் கடனா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கோவாக்சின் விநியோகத்திற்கு என்ன அவசரம்? செஞ்சோற்றுக் கடனா?’ – திருமாவளவன் ட்வீட்!

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கியிருக்கிறது. சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனிடையே, கோவாக்சினின் 3ம் கட்ட பரிசோதனை நிறைவடையாத சூழலில், அதற்குள்ளாகவே விநியோகிக்க தொடங்கியது ஏன் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

அதோடு, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மத்திய அரசு மறைமுகமாக தொடர்பு வைத்திருப்பதாகவும், அதற்காகவே தடுப்பூசி தயாரிக்கும் பணி அந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இத்தகைய சூழலில் தான், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு செய்யும் நன்றிக் கடன் இதுவா! என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி கூறியதை இதைத் தான் போல..!