எனது நெற்றியில் திருநீறு பூசுவதால் எனக்கு புண்ணியம் கிடைக்கும் என நான் எண்ணவில்லை- திருமாவளவன்

 

எனது நெற்றியில் திருநீறு பூசுவதால் எனக்கு புண்ணியம் கிடைக்கும் என நான் எண்ணவில்லை- திருமாவளவன்

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்டது, நாமும் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பாகவும் செயலாற்ற வேண்டும். பிறப்பால் உயர்வு, தாழ்வு இருக்கிறது என பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பிரிவினையை உடைத்தெரிய அம்பேத்தகரும் பெரியாரும் போராடினார்கள். கிறித்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏன் விமர்சனம் செய்வதில்லை என கேட்கிறார்கள். சனாதனவாதிகளுக்கு சொல்கிறேன், அந்த மதங்களில் சமத்துவத்தை போதிக்கிறார்கள். அதனால் ஏற்கிறோம் விமர்சனம் செய்யவில்லை. இந்து மதத்தை எதிர்க்க வேண்டும் என்பது கொள்கை கிடையாது.

எனது நெற்றியில் திருநீறு பூசுவதால் எனக்கு புண்ணியம் கிடைக்கும் என நான் எண்ணவில்லை. பூசுபவர்களின் ஆசையை தடுக்க கூடாது என்று ஏற்று கொள்கிறேன். மனித குலத்தை மதிக்கும் மதங்களை நான் ஏற்றுகொள்கிறேன். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் கிறிஸ்த்தவம் மானுடத்தை வெல்லும். மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

எனது நெற்றியில் திருநீறு பூசுவதால் எனக்கு புண்ணியம் கிடைக்கும் என நான் எண்ணவில்லை- திருமாவளவன்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. திரும்ப பெற மாட்டோம் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த சட்டத்தால் பொது வணிக திட்டம் மூடப்படும். அது தான் அவர்களின் திட்டமும். சட்டத்தை திரும்ப பெரும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு துணை நிற்கும். மக்களிடத்தில் வரி வசூல் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. மக்கள் மீது பாரம் சுமத்தும் இதனை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

திமுக தரப்பில் முதல்வர் மீதே ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதி விசாரணை செய்ய வேண்டும் திமுக கூட்டணி மெகா கூட்டணியாக இருக்கிறது. இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் அதிமுக கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது. இதற்கு மக்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகுட்டுவார்கள். கொரோனா, புயல் என எதற்கும் நிவாரணம் வழங்காமல் பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்குவது ஏமாற்று வேலை. மக்கள் இந்த உள் நோக்கங்களை புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தேர்தலில் இது பிரிதிபலிக்காது. உடனடியாக புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும்” எனக் கூறினார்.